அயோத்திக்கு அடுத்து வரணாசி?

அயோத்திக்கு அடுத்து வரணாசி?

1992ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியின் இந்துவாதிகளால் இராமர் பிறந்த இடம் என்று கருதப்படும் அயோத்தியில் இருந்த Babri மசூதி உடைக்கப்பட்டு தற்போது அங்கு இராமர் ஆலயம் ஒன்று அமைக்கப்படுகிறது. இந்நிலை விரைவில் வரணாசியிலும் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

17ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த Aurangzeb என்ற மோகல் (Mughal) ஆட்சியாளர் வரணாசியில் (Varanasi) இருந்த இந்து ஆலயம் ஒன்றை உடைத்து Gyanvapi என்ற இஸ்லாமிய மசூதியை கட்டியிருந்தார். பின்னர் இந்து இராணி ஒருவர் அந்த மசூதிக்கு அருகில் காசி விஸ்வநாத் (Kashi Vishwanath) ஆலயத்தை கட்டியிருந்தார். தற்போது இரண்டும் அருகருகில் உள்ளன.

சில இந்துக்கள் இங்குள்ள மசூதியை மீண்டும் கைப்பற்ற முனைகின்றனர். வழக்குகள் நீதிமன்றங்களில் நகரும் வேளையில் போலீசார் இரண்டு ஆலயங்களையும் தற்போது பாதுகாக்கின்றனர்.

இந்து, இஸ்லாமிய ஆலயங்கள் மட்டுமன்றி கிறிஸ்தவ, பௌத்த, ஜெயின் ஆலயங்களும் இங்கு உண்டு. சுமார் 1.5 மில்லியன் மக்கள் வாழும் இந்த நகரில் சுமார் 30% மக்கள் இஸ்லாமியர். 

அரசியலுக்கு அப்பால் அனைத்து மக்களும் இணைந்து இங்கு வாழ்ந்து வந்திருந்தனர். இந்துக்கள் விரும்பி அணியும் hand-looms என்ற சில்க் சேலைகள் பொதுவாக இஸ்லாமியராலேயே இங்கு நெய்யப்படுகின்றன.

தற்போதைய இந்திய பிரதமர் மோதி இந்த கங்கை கரையோர நகரிலேயே போட்டியிட்டு வென்று இருந்தார்.

1991ம் ஆண்டு இந்தியாவில் நடைமுறை செய்யப்பட்ட Places of Worship Act சட்டப்படி 1947ம் ஆண்டில் (சுதந்திரம் அடைந்த ஆண்டு) இருந்த ஆலயங்கள் எதுவும் மாற்றி அமைக்கப்பட முடியாது.