இன்று இலங்கை அரசும் சீன அரசும் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளன. இலங்கை அரசு சார்பில் Sri Lanka Ports Authorityயும் சீனா சார்பில் China Merchants Ports Holdingsம் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளன.
.
.
நீண்டகால இழுபறிக்கு பின் முடிவுக்கு வந்த இந்த புதிய ஒப்பந்தப்படி சீனா வரும் 99 வருடங்களுக்கு இத்துறைமுகத்தின் 70% உரிமையை கொண்டிருக்கும். இலங்கை மிகுதி 30% உரிமையை கொண்டிருக்கும். அத்துடன் சீனா தலைமையில் இடம்பெறவுள்ள வர்த்தக நடவடிக்கைகளுக்கு மேலும் 15,000 ஏக்கர் (60 சதுர km) நிலம் வழங்கப்படும். இதற்கு சுமார் $600 மில்லியன் முதலீட்டையும் சீன செய்யும்.
.
.
இந்த ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கான சீனாவின் பெருமளவு கடன் சீனாவுக்கான சொத்து உரிமை ஆக்கப்பட்டு உள்ளது.
.
அதேவேளை இந்த ஒப்பந்தத்துக்கு அமைய இலங்கை சுமார் $1.1 பில்லியன் பெறும், இந்த பணம் இலங்கையின் ஏனைய கடன்களை அடைக்க உதவும்.
.
இந்த துறைமுகம் சீனாவின் one-belt-one-road திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.
.
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த துறைமுகம் சீனாவின் படைகளால் பயன்படுத்தப்படும் என்று அச்சம் தெரிவித்து இருந்தன. அதனால் சீனா இந்த துறைமுகத்தை இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கைக்கும் இணங்கி உள்ளது.
.