அமெரிக்காவில் இன்று இடம்பெற்ற இடைக்கால (Midterm) தேர்தலில் ரம்பின் Republican கட்சி மேலும் 2 Senate ஆசனங்களை பறித்து Senate பெரும்பான்மையை (51/100) மீண்டும் வென்றுள்ளது. அனால் Democratic கட்சி மேலும் 26 House ஆசங்களை பறித்து House (House of Representative) பெரும்பான்மையை (219/435) வென்றுள்ளது. இன்றுவரை Senate, House இரண்டும் ரம்பின் கட்சியிடமே இருந்தன. மொத்தம் 100 ஆசனங்கள் கொண்ட senate மற்றும் 435 ஆசனங்கள் கொண்ட House இரண்டையும் சேர்த்து Congress என்று அழைப்பர்.
.
இன்றைய தேர்தலின் Republican கட்சி 24 House ஆசனங்களை இழந்தது ரம்புக்கு தோல்வி என்றாலும், அவர்கள் 3 மேலதிக Senate ஆசனங்களை வென்றதால் தேர்தல் அவர்களுக்கு படுதோல்வி என்று சொல்வதற்கில்லை. ஆனால் ரம்ப் தான் விரும்பிய அனைத்தையும் மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற தேர்தல் காலத்தில் இருந்தது போல் இன்றும் அமெரிக்கா பிளவுபட்டே உள்ளது.
.
அமெரிக்காவில் தேர்தல்கள் செலவந்தர்களுக்கு மட்டுமே உரிய ஒன்றாக மாறி வருகிறது. Illinois மாநில Governor தேர்தலுக்கு Democratic கட்சியை சார்ந்த J. B. Pritzker என்பவரும் Republican கட்சியை சார்ந்த Bruce Rauner என்பவரும் மொத்தம் $255 மில்லியன் பணத்தை செலவழித்து உள்ளனர்.
.
அமெரிக்காவின் 251 ஆவது பணக்காரர் ஆகிய Pritzker (இவரின் மொத்த சொத்து $3.4 பில்லியன்) தனது சொந்த பணத்தில் $171 மில்லியனையும், Rauner தனது சொந்த பணத்தில் $70 மில்லியனையும் செலவழித்து உள்ளனர். அதிகம் பணம் செலவழித்த Pritzker வென்றுள்ளார். இந்த Governor பதவிக்கு வருட ஊதியம் சுமார் $177,412.00 மட்டுமே.
.
இந்த தேர்தலில் முதல் முறையாக இரண்டு இஸ்லாமிய பெண்கள் House ஆசனங்களை வென்றுள்ளனர். Minnesota மாநிலத்தில் வென்ற Ilhan Omar என்பவர் சோமாலியாவில் பிறந்தவர். Michigan மாநிலத்தில் வென்ற Rashida Tlaib அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த பாலஸ்தீன பெற்றாருக்கு பிறந்தவர்.
.