அமெரிக்க H-1B விசாவை அள்ளி எடுக்கும் இந்திய நிறுவனங்கள்

Visa

அமெரிக்கா H-1B என்ற தற்காலிக வேலைவாப்பு விசாவை வெளிநாட்டவர்க்கு வழங்குவதுண்டு. அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள், தமக்கு தேவையான வல்லுனர்கள் அமெரிக்காவில் கிடைக்காதுவிடின், இந்த விசா மூலம் உலகம் எங்கிருந்தும் வல்லுனர்களை குறிப்பட்ட காலத்துக்கு வரவழைத்து பணியில் ஈடுபடுத்தலாம். வருடம் ஒன்றில் சுமார் 85,000 H-1B விசாக்கள் வழங்கப்படும்.
.
இந்த விசா உலககின் எல்லா நாடுகளுக்குமானது என்றாலும் இந்திய நிறுவனங்கள் இவற்றின் 70% பங்கை எடுக்கின்றன என காணப்பட்டுள்ளது. மிக அதிக அளவில் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் தாம் விசா பெறும் வாய்ப்பை இந்த நிறுவனங்கள் அதிகரிக்கின்றனவாம்.
.
இந்தியாவில் தலைமை அலுவலகத்தை கொண்ட Tata Consulting Services, InfoSys, Wipro ஆகிய நிறுவனங்கள் இதில் முன்னணி இடம் வகிக்கின்றன. Cognizant என்ற நிறுவனம் அமெரிக்காவில் தலைமை அலுவலகத்தை கொண்டிருந்தாலும் இதுவும் ஒரு இந்திய நிறுவனமே. இவை ஏறைக்குறைய 100% பணியாளர்களை இந்தியாவில் இருந்தே அமெரிக்காவுக்கு எடுக்கின்றன.
.

கடந்த வருடம் Tata Consulting Services 14,000 இக்கும் மேலான விண்ணப்பங்களை சமர்ப்பித்து 5,650 விசாக்களை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் உலக அளவில் சுமார் 325,000 ஊழியர்களை கொண்டுள்ளது. Cognizant நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் 4,200 விசாக்களை பெற்றுள்ளது.
.