அமெரிக்க Blinken  சீனாவில், எதிர்பார்ப்பு குறைவு

அமெரிக்க Blinken  சீனாவில், எதிர்பார்ப்பு குறைவு

அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் (Secretary of State) Anthony Blinken தற்போது இரு தின பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பலத்த இழுத்தடிப்புகளின் பின் இடம்பெறும் இந்த பயணம் தொடர்பாக இருதரப்பும் இதுவரை குறைந்த எதிர்பார்புகளையே கொண்டுள்ளன.

Blinken இந்த பயணத்தை பெப்ரவரி மாதம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் சீனாவின் பலூன் ஒன்று அமெரிக்கா மேலே பறந்ததால் Blinken பயணத்தை நிறுத்தி இருந்தார்.

அமெரிக்காவும், சீனாவும் பல முனைகளில் மோதி வருவதாலேயே இவர்களிடையே அமெரிக்க சனாதிபதி பைடென் பதவிக்கு வந்தகாலம் முதல் எந்தவித இணக்கங்களும் ஏற்படவில்லை.

அமெரிக்க சனாதிபதி பைடென் சீன சனாதிபதி சீயை சந்திக்க முயன்றாலும் அது இதுவரை இடம்பெறவில்லை. தற்போது சீனாவில் உள்ள Blinken னும் சீயை சந்திக்க இதுவரை திட்டம் இல்லை.

ஞாயிறு பேச்சுக்கள் நலமாக அமையின் திங்கள் செயலாளர் Blinken சனாதிபதி சீயை சந்திக்க சந்தர்ப்பம் உண்டு. ஆனாலும் அதற்கான எதிர்பார்ப்புகள் மிக குறைவு.