தற்போது அமெரிக்காவின் Guam தீவுக்கு அண்மையில் நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் USS Theodore Roosevelt என்ற விமானம் தாங்கி யுத்த கப்பலில் இருந்து கடல்படையினரை Guam தீவுக்கு எடுக்க அமெரிக்க படைகளின் தலைமை தீர்மானம் செய்துள்ளது.
.
இந்த விமானம் தாங்கியில் இருந்த 1,273 படையினரை கொரோனா தொற்றுக்கான சோதனை செய்தபோது 93 பேர் கொரோனா தொற்றி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தங்கியின் அதிகாரி அணைத்து படையினரையும் தரைக்கு எடுக்க வேண்டுகோள் விடுத்தார். ஆனால் பென்ரகான் அதற்கு முதலில் இணங்கவில்லை.
.
சுமார் 4,000 படையினரையும், 90 யுத்த விமானங்களையும் கொண்டுள்ள இந்த அணுமின் விமானம் தாங்கி தொடர்ச்சியாக பராமரிக்கப்படல் அவசியம். அதனாலேயே பென்ரகான் அனைவரையும் தரை எடுக்க விருப்பவில்லை.
.
மேற்படி செய்தி அமெரிக்காவில் பகிரங்கத்து வந்தபின் பென்ரகான் கொரோனா தொற்றியோர் உட்பட 2,700 படையினரை Guam தீவுக்கு எடுக்க இணங்கி உள்ளது. இவர்கள் வெள்ளிக்கிழமைக்கு முன் தரைக்கு எடுக்கப்படுவர். சுமார் 1,000 படையினர் தொடர்ந்தும் கப்பலில் தங்கி இருந்து பராமரிப்பு வேலைகளை செய்வர்.
.
இந்த விமானம் தாங்கி இதுவரை யுத்தத்துக்கு தயார் நிலையில் இருந்திருந்தாலும், வெள்ளிக்கு பின் தயார் நிலையில் இருக்க முடியாது.
.
அமெரிக்காவின் 26 ஆவது ஜனாதிபதியின் பெயரை தாங்கும் இந்த அணுமின் (nuclear) விமானம் தாங்கி யுத்த கப்பல் 332.8 மீட்டர் நீளமும், 76.8 மீட்டர் அகலமும் கொண்டது.
.