அமெரிக்க விமானப்படை தளங்கள் அருகே Drones 

அமெரிக்க விமானப்படை தளங்கள் அருகே Drones 

பிரித்தானியாவில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளங்கள் மூன்றின் அருகே சில அடையாளம் காணப்படாத drone கள் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான காலத்தில் பறந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் Suffolk பகுதியில் உள்ள RAF Lakenheath, RAF Mildenhall மற்றும் Norfolk பகுதியில் உள்ள RAF Feltwell விமானப்படை தளங்களுக்கு அருகேயே மேற்படி இனம் தெரியாத ஆள் இல்லாத drone கள் பறந்ததாக கூறப்படுகிறது.

மேற்படி 3 தளங்களையும் அமெரிக்காவே பயன்படுத்துகிறது. Lakenheath தளத்தில் அமெரிக்காவின் F-35A வகை யுத்த விமானங்களும், F-15E வகை யுத்த விமானங்கள் நிலை கொண்டுள்ளன. Mildenhall தளத்தில் யுத்த விமானங்களுக்கு எண்ணெய் நிரப்பும் விமானங்கள் நிலை கொண்டுள்ளன. Feltwell தளத்தில் இராணுவ படைகள் உள்ளன.

மேலதிக விபரங்களை வெளியிட அமெரிக்காவும், பிரித்தானியாவும் மறுத்துள்ளன.