ரஷ்ய வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் அமெரிக்காவின் வர்த்தக செய்மதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வர்த்தக செய்மதிகள் யுகிரேனுக்கு சேவைகளை வழங்கினால் அந்த செய்மதிகள் தாக்குதலுக்கு இலக்காகும் என்றே கூறப்பட்டுள்ளது.
“Quasi-civilian infrastructure may be a legitimate target for a retaliatory strike” என்று கூறியுள்ளார் Konstantin Vorontsov.
ரஷ்யா எந்த அமெரிக்க நிறுவனத்து செய்மதிகள் அழிக்கப்படும் என்று குறிப்பிட்டு கூறவில்லை. ஆனால் யுகிரேன் பொதுமக்களுக்கு மட்டுமன்றி இராணுவத்துக்கும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் SpaceX போன்ற அமெரிக்க நிறுவங்களையே ரஷ்யா குறிப்பிடுகிறது என்று கருதப்படுகிறது.
SpaceX நிறுவனம் தனது Starlink என்ற செய்மதி மூலமான இணைய சேவையை யுகிரேனுக்கு வழங்கி வருகிறது.
1957ம் ஆண்டு சோவியத்தே முதல் தடவையாக Sputnik 1 என்ற செய்மதியை ஏவி இருந்தது. பின் 1961ம் ஆண்டு முதல் தடவையாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பி இருந்தது. 2021ம் ஆண்டு தனது பழைய செய்மதி ஒன்றை ஏவுகணை மூலம் தாக்கி அழித்திருந்தது.