அமெரிக்க யூத ஆலயத்தில் 11 பேர் பலி

Pittsburgh

அமெரிக்காவின் Pittsburgh நகரில் உள்ள யூதர்களின் ஆலயம் ஒன்றில் (synagogue) இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலுக்கு 11 பேர் பலியாகியும், மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். காயமடைந்தோருள் 4 போலீசாரும், சந்தேக நபரும் அடங்குவர்.
.
இந்த தாக்குதலை செய்தவர் என்று கருதப்படும் Robert Bowers, வயது 46, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த தாக்குதலை AR-15 என்ற இராணுவ வகை துப்பாக்கி கொண்டே நிகழ்த்தி உள்ளார். அப்பொழுது இவரிடம் வேறு இரண்டு கைதுப்பாக்கிகளும் இருந்துள்ளன.
.
சந்தேகநபர் யூதர்கள் வெள்ளையர்களின் எதிரிகள் (enemy of white people) என்று கூறிவந்துள்ளார். இவரிடம் சட்டப்படி பதியப்பட்ட 21 ஆயுதங்கள் இருந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
.
ஆலயத்தில் குழந்தை ஒன்றுக்கு பெயரிடும் நிகழ்வு ஒன்று நடைபெற்ற வேளையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

.