அமெரிக்க யுத்த குற்றவாளி தப்பிக்க, அதிகாரி பதவி நீக்கம்

Gallagher

2017 ஆம் ஆண்டு Edward Gallagher என்ற அமெரிக்க Navy SEAL விசேட படை உறுப்பினர் தடுப்புக்காவலில் இருந்த 17 வயது ஈராக் IS உறுப்பினர் ஒருவரை கத்தியால் வெட்டி கொலை செய்து, மரணித்த உடலுடன் படமும் எடுத்து பெருமைப்பட்டார் என்று கூறி அமெரிக்க இராணுவ நீதிமன்றால் யுத்த குற்ற விசாரணை செய்யப்பட்டது. இறுதியில் மரணித்த உடலுடன் படம் எடுத்து மட்டுமே குற்றமாக அமெரிக்க இராணுவ நீதிமன்றால் காணப்பட்டது. கொலை குற்றச்சாட்டு கைவிடப்பட்டது.
.
அதை தொடர்ந்து அமெரிக்க கடற்படை அதிகாரிகள் Gallagherரின் பதக்கங்களையும் பறிக்க முனைந்தனர். ஆனால் அமெரிக்க சனாதிபதி ரம்ப் Gallagher மீது நடவடிக்கைகள் எடுப்பதை வன்மையாக கண்டித்தார். பதிலுக்கு Gallagher மீது நடவடிக்கை எடுக்கும் கடற்படை அதிகாரிகள் மீது காழ்ப்பு கொட்டினார்.
.
அமெரிக்க கடற்படையின் செயலாளரான Richard Spencer மீது ரம்பின் காழ்ப்பு பரவியது. Gallagherரை யுத்த குற்ற தண்டனைகளில் இருந்து தப்பிக்க சனாதிபதி முனைந்தால் தான் பதவி விலகுவேன் என்று கூறியிருந்தார் கடற்படை செயலாளர் Richard Spencer.
.
இன்று, பாதுகாப்பு செயலாளர் Esper விடுத்த வேண்டுகோளின்படி கடற்படை செயலாளர் பதிவில் இருந்து Richard Spencer விலகி உள்ளார். தனது கடிதத்தில் தான் இராணுவ ஒழுக்கத்தை (discipline) கொண்டிருக்க விரும்புவதாகவும் ரம்ப் அதற்கு முரண் என்றும் கூறியுள்ளார்.
.
அதேவேளை ரம்ப் இரண்டு பொதுமக்களை கொலை செய்த குற்றத்துக்காக 19-வருட தண்டனை பெற்ற Clint Lorance என்பவருக்கும், மேஜர் Mathew Golsteyn என்பருக்கும் மன்னிப்பு அளித்துள்ளார்.
.