San Diego நகருக்கு அண்மையில், அமெரிக்க-மெஸ்சிக்கோ எல்லையின் கீழே மேலுமொரு சுரங்க பாதையை அமெரிக்கா கண்டுபிடித்து உள்ளது. எல்லைக்கு கீழே 532 மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்க பாதை மெக்ஸிக்கோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை கடத்த பயன்பட்டு உள்ளது.
சுமார் 1.2 மீட்டர் விட்டம் கொண்ட இந்த சுரங்க பாதை தரமான சுவர்களையும், மின் இணைப்பையும், காற்றோட்ட வசதிகளையும் கொண்டது. அமெரிக்காவின் பக்கத்தில் இது ஒரு களஞ்சியத்துள் இறங்கு பாதையை கொண்டுள்ளது. இது நிலத்துக்கு கீழே சுமார் 6 மாடி ஆழத்தில் அமைத்துள்ளது.
மேற்படி களஞ்சியத்தில் இருந்து 799 kg cocaine, 75 kg meth, 1.6 kg heroin ஆகியன கைப்பற்றப்பட்டு உள்ளன. கலிபோர்னியா வாசிகள் 6 பேர் கைதும் செய்யப்பட்டு உள்ளனர்.
2006ம் ஆண்டு முதல் சுமார் 15 இவ்வகை நிலக்கீழ் சுரங்கங்கள் அறியப்பட்டு இருந்தன. அவை உடனே சீமெந்து மூலம் மூடப்பட்டன.