Federal Reserve என்ற அமெரிக்க மத்திய வங்கி தலைவர் Chairman Jerome Powell மீதும் அமெரிக்க சனாதிபதி பாய்ந்துள்ளார். Powell ஐ பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் ரம்ப் வியாழன் கேட்டுள்ளார்.
ரம்பின் இறக்குமதி வரிகள் (tariffs) அமெரிக்காவை பொருளாதார மந்த நிலைக்கு தள்ளும் நிகழ்தவது அதிகரித்து உள்ளது என்று கூறும் Powell ரம்ப் விரும்புவதுபோல் மத்திய வங்கியின் வட்டி வீதத்தையும் குறைக்கவில்லை. அதனாலேயே ரம்ப் விசனம் கொண்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய வங்கி தனது வட்டி வீதத்தை வியாழன் காலை குறைத்ததையும் ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
2019ம் ஆண்டும் ரம்ப் Powell ஒரு எதிரி (enemy) என்றும் கூறியிருந்தார்.
Powell முதலில் 2018ம் ஆண்டு Chairman பதவியை பெற்று இருந்தார். பின் 2021ம் ஆண்டு பைடென் ஆட்சியில் தொடர்ந்தும் அதே பதவியை தொடந்தார். இவரின் தற்போதைய பதவி 2026ம் ஆண்டு வரை நீடிக்கும்.