அமெரிக்க சனாதிபதி சீன பொருட்களுக்குகான இறக்குமதி வரியை செவ்வாய்க்கிழமை 54% இல் இருந்து 104% ஆக அதிகரித்த பின் இன்று புதன் சீனா அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 34% இல் இருந்து 84% ஆக அதிகரித்து உள்ளது. இதனால் பங்குச்சந்தைகள் மேலும் கவிழும் வாய்ப்பு அதிகமாகிறது.
ரம்ப் இரண்டாம் தடவை பதவிக்கு வந்த பின் சீன பொருட்களுக்கு முதலில் 10% இறக்குமதி வரியை அறிவித்து இருந்தார். பின் உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் 10% வரியை அறிவித்தார். அதனால் சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி 20% ஆகியது.
பின் திங்கள் பல நாடுகளுக்கு வெவ்வேறு அளவிலான வரியை அறிவித்தார். அதில் சீனாவுக்கான வரி 34%. அதனால் சீனாவுக்கான வரி 54% ஆகியது.
சீனா உடனே 34% இறக்குமதி வரியை அமெரிக்க பொருட்களுக்கு அறிவித்தது. அந்த வரியை செவாய்க்கு முன் நிறுத்தாவிடின் தான் சீனாவுக்கான வரியை மேலும் 50% ஆல் அதிகரித்து 104% ஆக உயர்த்த அறிவித்தார். சீனா பின்வாங்காத நிலையில் சீனாவுக்கான ரம்பின் வரி 104% ஆகியது.
ரம்பின் மிரட்டலுக்கு அடிபணியாத இன்று புதன் அமெரிக்காவுக்கான இறக்குமதி வரியை 50% ஆல் அதிகரித்து 84% ஆக்கியுள்ளது.
இந்த வரி யுத்தம் தற்போதைக்கு தணியும் அறிகுறிகளை கொண்டிருக்கவில்லை.