ரம்ப் சீனாவிலிருந்தான இறக்குமதிகளுக்கு அண்மையில் 34% மேலதிக இறக்குமதி வரிகளை விதித்த பின் சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% பதிலடி வரியை இன்று அறிவித்துள்ளது. சீனாவின் இந்த வரிகள் இந்த மாதம் 10ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
அமெரிக்கா உற்பத்தி செய்யும் சோயாவின் (soybean) 60 முதல் 70% வரை சீனாவுக்கே செல்கிறது. அத்துடன் இதை பயிரிடும் மக்கள் பொதுவாக கிராமப்புற ரம்ப் ஆதரவாளர்களே. அமெரிக்காவின் Boeing விமானங்கள் அதிக அளவில் சீனாவால் கொள்வனவு செய்யப்படுகின்றன.
கனடா ஏற்கனவே NAFTA வுக்கு உட்படாத அமெரிக்க பொருட்களுக்கு 25% பதிலடி வரியை அறிவித்து உள்ளது.
ஐரோப்பிய நாடுகள் தமது பதிலடி வரியை விரைவில் அறிவிக்க உள்ளன.
தற்போது உலக அளவில் இடம்பெறும் வரி யுத்தம் தொடர்ந்தால் உலக பொருளாதாரம் முடங்குவது அல்லது மந்தம் அடைவது உறுதி.
இந்த வரி யுத்தம் காரணமாக மக்கள் பங்கு சந்தைகளில் முதலிட பயம் கொள்கின்றனர். தங்கத்தின் விலை அளவு கடந்து அதிகரிக்கிறது. எரிபொருள் விலை 4 ஆண்டுகளுக்கு முன் இருந்த மலிவு விலையை அடைந்துள்ளது.