அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் (Pentagon) கீழ் இயங்கும் National Defense University என்ற பல்கலைக்கழகம் 2021 ஆம் ஆண்டுக்கான பாடங்களின் (curriculum) 50% பங்கு சீனாவை மையமாக கொண்டிருக்கவேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Mark Esper வியாழக்கிழமை கூறியுள்ளார்.
வளரும் சீனாவை நேர்கொள்ள அமெரிக்காவுக்கு குறைந்தது 500 யுத்த கப்பல்கள் தேவை என்று Esper ஏற்கனவே கூறி இருந்தார்.
அமெரிக்காவின் The Heritage Foundation என்ற நிபுணர்கள் அமைப்பின் அமர்வு ஒன்றில் பங்கொண்ட வேளையிலேயே Esper மேற்படி அறிவிப்பை செய்துள்ளார்.
அமெரிக்காவின் National defense University யில் பொதுவாக அமெரிக்க படைகளின் உறுப்பினர்களே உயர் கல்விகளை கற்பர். அமெரிக்காவின் வெளியுறவு திணைக்கள (State Department) உறுப்பினரும் அங்கு கற்பர்.
சீனாவும், ரஷ்யாவும் அமெரிக்கா கடுமையான உழைப்பு மூலம் பெற்ற ஆளுமையை கட்டுப்படுத்த முனைகின்றன என்றும் Esper மேற்படி உரையில் கூறி உள்ளார்.