இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு இராணுவ உடன்படிக்கையை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் வழங்கி வருகிறது. அதன் ஒரு அங்கமாக இலங்கைக்கான தூதுவர் Alaina Teplitz ஒரு நேர்முகத்தை ரூபவாகினிக்கு வழங்கி உள்ளார்.
.
Status of Forces Agreement (SoFA), Visiting Forces Agreement (VFA) ஆகிய இரண்டு உடன்படிக்கைகளுக்கே அமெரிக்கா அழுத்தம் வழங்கி வருகிறது. இந்த இரண்டு உடன்படிக்கைகளும், நடைமுறைக்கு வந்தால், அமெரிக்க படைகள் இலகுவில் இலங்கைக்கு நுழைய வழிவகுக்கும்.
.
மேற்படி உடன்படிக்கைகைகள் தற்போது நடைமுறையில் உள்ள ‘clearance’ பெற்றுக்கொள்ளும் ‘red tape’ களுக்குள் அகப்படாது இராணுவ நுழைவை விரைவுபடுத்தும் என்று கூறுகிறது அமெரிக்கா.
.
தூதுவர் தனது கூற்றில் SoFA மற்றும் VFA ஆகிய உடன்படிக்கைகள் சீனாவை மனதில் கொண்டு உருவாக்கப்படுபவை அல்ல என்றும் கூறியுள்ளார்.
.
தான் இலங்கையின் உரிமைக்கு ஆபத்தான எந்தவொரு உடன்படிக்கையையும் ஆதரிக்க மாட்டேன் என்றுள்ளார் ஜனாதிபதி சிறிசேன.
.