அமெரிக்க பங்குச்சந்தை 2 தினங்களில் $6 ட்ரில்லியன் இழப்பு 

அமெரிக்க பங்குச்சந்தை 2 தினங்களில் $6 ட்ரில்லியன் இழப்பு 

வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் DOW JONES பங்குச்சந்தை சுட்டி மேலும் 2,230 புள்ளிகளை (5.5%) இழந்துள்ளது. இந்த சுட்டி ஏற்கனவே வியாழக்கிழமை 4% பெறுமதியை இழந்திருந்தது.

வெள்ளிக்கிழமை NASDAQ மற்றும் S&P 500 ஆகிய சுட்டிகளும் சுமார் 6% பெறுமதியை இழந்துள்ளன.

ரம்பின் இந்த வரி யுத்தத்தால் அமெரிக்காவின் பங்குச்சந்தைகள் கடந்த 2 தினங்களில் மட்டும் $6 ட்ரில்லியன் (அல்லது $6,000 பில்லியன்) பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளன. வரலாற்றில் இது மிக பெரிய இழப்பாகும்.

ரம்பின் வரிக்கு சீனா 34% பதிலடி வரியை நேற்று அறிவித்திருந்தது. அமெரிக்க பங்குச்சந்தைங்கள் சீனாவின் பெரிய அளவிலான பதிலடி வரியால் மிரண்டு உள்ளன. 

அமெரிக்காவின் நண்பர்கள், எதிரிகள் உட்பட உலகம் முழுவது ரம்பின் வரி தாக்குதலுக்கு அடிபணிய மறுத்துள்ளமை ரம்பை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

ரம்ப் அரசு பெரும் இறக்குமதி வரிகளை அறிவித்தபின் மற்றைய நாடுகளை திகில் அடைய வேண்டாம் என்றும், தம்மை அழைத்து பேச்சுக்களை ஆரம்பிக்குமாறும் கூறியது. ஆனால் கனடா முதல் சீனா வரை பேச்சை ஆரம்பிக்காது பதிலடி வரிகளை அறிவித்தன. இதை ரம்ப் அரசு எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் தற்போது ரம்ப் அரசே பின்வாங்கவேண்டிய நிலையில் உள்ளது.