ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் தளங்கள் மீது ஈரான் சுமார் 12 ஏவுகணைகளை உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை ஏவி உள்ளது. பக்தாத் நகருக்கு அண்மையில் உள்ள Al Asad Air Base, Irbil ஆகிய தளங்களே ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகின.
.
ஈரானின் ஜெனரல் Qasem Soleimani மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியை ஈரானின் தாக்குதல் என்றுள்ளது ஈரான். அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலுக்கு Soleimani பலியாகி இருந்தார்.
.
இந்த ஏவுகணைகள் ஈரானில் இருந்தே ஏவப்பட்டு உள்ளன.
.
தமது தளங்கள் மீதான தாக்குதல்களை தாம் அறிவோம் என்றும், நிலைமையை அவதானிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
.
தாக்குதலின் பாதிப்புக்களின் விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை.
.