தரை வழியாக காசா சென்ற அகதிகளுக்கான உணவு போன்ற பொருட்களை இஸ்ரேல் காசா எல்லைகளில் தடுத்து நிறுத்தியபோது அந்த தடைகளை தகர்க்க வல்லமை கொண்டிருந்த அமெரிக்கா மறைமுகமாக இஸ்ரேலின் தடைகளை ஊக்குவித்தது.
ஆனாலும் உலகின் காதில் பூ சுற்ற இரண்டு பக்க நாடகங்களை அமெரிக்கா பெரும் ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்தது.
முதலாவது வானத்தில் இருந்து உதவி பொதிகளை வீசுவது. இது Berlin Airlift போன்று முழு மனதுடன் செய்யப்பட்டது அல்ல. அங்கே தினமும் 3,475 தொன் பொருட்களை வீச ஆரம்பித்த திட்டம் இறுதியில் தினமும் 12,941 தொன் வரை வீசியது.
ஆனால் காசாவில் தாம் கொடி பிடித்து ‘படம்’ காட்டிய பின் வானத்தில் இருந்து பொருட்களை வீசுவது சத்தமின்றி மெல்ல கைவிடப்பட்டது. அமெரிக்கா மட்டுமன்றி பக்கவாத்திய நாடுகளும் வானத்தில் படம் காட்டி, தம்மை தாமே பாராட்டி போயின.
அமெரிக்காவின் இரண்டாவது பக்க நாடகம் காசாவில் ஒரு தற்காலிக துறைமுகம் அமைத்து அகதிகளுக்கு பொருட்களை வழங்குவது போல நடிப்பது. தரைவழி பொருட்களை தடுத்த இஸ்ரேல் அவ்வாறே கடல்வழி உதவிகளையும் தடத்தது. இந்த பொருட்களை எடுத்து சென்ற World Kitchen தொடர்களை படுகொலை செய்யப்பட்டனர்.
மே மாத நடுப்பகுதியில் ஆரம்பித்து ஜூலை ஆரம்பம்வரை நீடித்த இந்த கடல்வழி உதவி குறைந்தது 3 தடவைகள் திருத்த வேலைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த தற்காலிக துறைமுகம் மூலமான உதவி வழங்கல் நாடகமும் நாளை புதன் கிழமையுடன் நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்கா தற்காலிக துறைமுகத்தை தன்னுடன் எடுத்து செல்லும்.
இந்த தற்காலிக துறைக்கு அமெரிக்கா $230 மில்லியன் செலவு செய்ததாக கூறுகிறது. அத்துடன் 1,000 அமெரிக்க படையினரும் பங்கு கொண்டிருந்தாராம்.