அமெரிக்க டாலரின் பெறுமதி அடுத்த ஆண்டு முடிவுக்குள் சுமார் 35% வரையால் வீழ்ச்சி அடையும் என்கிறார் Stephen Roach என்ற அமெரிக்காவின் Yale University ஆய்வாளர். ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் அமெரிக்க டாலர் 4.3% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க டாலர் வீழ்ச்சிக்கு மூன்று காரணங்களை முன்வைக்கிறார் Stephen Roach. அமெரிக்காவின் தேசிய சேமிப்பு அளவு குறைதல், யூரோவினதும், சீனாவின் யுவானினதும் பெறுமதி அதிகரித்தல், மற்றும் அமெரிக்காவின் ஆளுமை குறைதல் ஆகியனவே அவர் முன்வைக்கும் காரணங்கள் ஆகும்.
அமெரிக்காவின் இரண்டாம் காலாண்டு சேமிப்பு -1% ஆக உள்ளது. 2008 ஆம் ஆண்டும் அமெரிக்க டாலர் இந்நிலையை அடைந்து இருந்தது. அப்போது உலகின் பல இடங்களில் அமெரிக்கா டாலர் பாவனை குறைந்து இருந்தது.
இந்த ஆண்டு அமெரிக்காவின் வரவுசெலவின் துண்டுவிழும் தொகை அந்நாட்டு GDP யின் 16% அளவில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதாவது ஆண்டின் இறுதியில் துண்டுவிழும் தொகை $3.7 டிரில்லியன் ஆக இருக்கும். துண்டுவிழும் தொகை தற்போது $2.744 டிரில்லியன் ஆக உள்ளது
அத்துடன் அமெரிக்காவின் வட்டி வீதமும் 0 ஆக நீண்டகாலம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அது வெளிநாடுகளின் முதிலீடுகளை கவராது.