Robert Menendez என்ற அமெரிக்க செனட்டர் மீதும் அவரின் மனைவி மீதும் அமெரிக்க அதிகாரிகள் வழக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். New Jersey மாநிலத்தில் இருந்து Senator ஆக தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்த இவர் ஒரு Democratic கட்சி உறுப்பினராவார்.
இவர் பணம், தங்கம், ஆடம்பர கார் போன்ற வெகுமதிகளை இலஞ்சமாக பெற்றிருந்தார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவரின் வீட்டை தேடுதல் செய்த அதிகாரிகள் உடுப்புகளுள் மறைத்து வைத்திருந்த $480,000 பணம், $100,000 பெறுமதியான தங்கம் (gold bars), விலை உயர்ந்த ஆடம்பர கார் ஆகிய சொத்துக்களை கைப்பற்றி உள்ளனர்.
Arab Republic of Egypt க்கு உதவும் நோக்கிலேயே இந்த இலஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு கூறுகிறது. இவருக்கு Wael Hana, Jose Uribe, Fred Daibes ஆகிய மூன்று நபர்களே மேற்படி வெகுமதிகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட ஆடம்பர கார் Uribe யின் பெயரிலேயே உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.