அமெரிக்க சுதந்திர தினத்தில் இராணுவ தளபாடங்கள்

USFlag

ஜூலை 4ஆம் திகதி இடம்பெறும் அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் (Wasington DC) விமானங்கள், tanks உட்பட்ட இராணுவ அணிவகுப்பை செய்யுமாறு பணித்துள்ளார் ஜனாதிபதி ரம்ப். ஆனால் Democrsts கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நகரின் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
.
சில M1A1 வகை tank அப்பகுதிக்கு ஏற்கனவே நகர்த்தப்பட்டுள்ளது சிலரால் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த tank ஒவ்வொன்றும் சுமார் 60 தொன் எடை கொண்டது. இந்த எடை அந்த வீதிகளுக்கும், பாலங்களுக்கும் மிகையானவை.
.
பொதுவாக சர்வாதிகார நாடுகளில் இவ்வகை இராணுவ அணிவகுப்பு நிகழ்வதுண்டு. ஆனால் அமெரிக்காவுக்கு இது புதிது. 2017 ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்ற ரம்ப அங்கு இடம்பெற்ற Bastille Day அணிவகுப்பை பார்த்த பின்னரே தானும் அவ்வாறு நிகழ்த்த வேண்டும் என்று கூறினார்.
.