அமெரிக்க சனாதிபதி வேட்பாளர் ராமசுவாமி மீது சந்தேகம்

அமெரிக்க சனாதிபதி வேட்பாளர் ராமசுவாமி மீது சந்தேகம்

2024ம் ஆண்டு அமெரிக்காவில் சனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. அதில் Republican கட்சி சார்பில் போட்டியிட முனைவோரில் இந்திய பெற்றாருக்கு அமெரிக்காவில் பிறந்த விவேக் ராமசுவாமியும் ஒருவர்.

ஆனால் ராமசுவாமியின் வெளியிட்ட கூற்றுகள் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பி உள்ளது The New York Times பத்திரிகை. ராமசுவாமியிடம் தற்போது சுமார் $200 மில்லியன் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதை அவர் எவ்வாறு பெற்றார் என்பதை The New York Times விபரிக்கின்றது.

ராமசுவாமி தன்னை ஒரு விஞ்ஞானி (scientist) என்று விபரித்தாலும் இவரின் undergarduate படிப்பு மட்டும் science துறையிலும் graduate படிப்பு சட்ட (law) துறையிலும் இருந்துள்ளது. அத்துடன் இவர் உண்மையில் ஒரு முதலீட்டாளர், விஞ்ஞானி அல்ல என்று அறியப்படுகிறது.

GlaxoSmithKline என்ற பெரிய மருத்துவ ஆய்வு நிறுவனம் 4 தடவைகள் பரிசோதனை செய்து, 4 தடவைகளுக்கு பொய்யாகிய Alzheimer மருந்து ஒன்றை கைவிட்டு இருந்தது. 2014ம் ஆண்டு அந்த பொய்த்துப்போன மருந்தை கொள்வனவு செய்த ராமசுவாமி 6 மாதங்களில் தனது உயர்மட்ட தொடர்புகள், பிரச்சாரங்கள் மூலம் $3 பில்லியன் பங்கு சந்தை பெறுமதி கொண்ட Axovant என்ற நிறுவனம் ஆக்கினார். இது ராமசுவாமியின் Roivant நிறுவனத்தின் கிளை நிறுவனம்.

அப்போது $3 பில்லியன் பெறுமதியான அந்த நிறுவனத்தில் பணி செய்தோர் தொகை 8 பேர் மட்டுமே. அந்த 8 பேரில் ராமசுவாமி, அவரின் தாய், சகோதரன் ஆகியோரும் அடங்குவர்.

2015ம் ஆண்டு ராமசுவாமி Axovant நிறுவனத்தின் பங்குகளின் ஒரு பகுதியை Viking Global Investors என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்தார். பின்னர் Axovant நிறுவனத்தில் SoftBank என்ற ஜப்பானிய முதலீட்டு நிறுவனத்தை $1.1 பில்லியன் முதலீடு செய்ய வைத்தார்.

சில கிழமைகளின் பின் Alzheimer மருந்து பரிசோதனையில் மீண்டும் பொய்யானது. அதனால் Axovant நிறுவனத்தின் பங்கு சந்தை பெறுமதி ஒரே நாளில் 75% பெறுமதியை இழந்து பின் அழிந்தது.

2020ம் ஆண்டு ராமசுவாமி, அவரின் வரி (tax) பதிவுகளின்படி, $175 மில்லியனை முதலீடுகள் மூலமான இலாபமாக (capital gain) பெற்று இருந்தார்.