அமெரிக்க காலாண்டு பொருளாதார வீழ்ச்சி 32.9%

பெருமளவு கரோனா காரணமாகவும், ஓரளவு சீனாவுடனான பொருளாதார மோதல் காரணமாகவும் அமெரிக்காவின் இந்த ஆண்டின்  இரண்டாம் காலாண்டு (ஏப்ரல், மே, ஜூன்) பொருளாதாரம் (GDP) 32.9% ஆல் வீழ்ந்து உள்ளது. இவ்வகை வீழ்ச்சி அமெரிக்காவில் என்றைக்குமே இடம்பெற்றது இல்லை.

இதற்குமுன் குறிப்பிடக்கூடிய அளவில் 1958 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு பொருளாதாரம் 10.0% ஆல் வீழ்ந்து இருந்தது. 1980 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு பொருளாதாரம் 8.0% ஆல் வீழ்ந்து இருந்தது. 2008 ஆம் ஆண்டின் நாலாம் காலாண்டு பொருளாதாரம் 8.4% ஆல் வீழ்ந்து இருந்தது.

கரோனா முடக்கம் காரணமாக தமது வேலைகளை இழப்போர் தொகையின் வேகமும் குறைந்தாலும், தொடர்ந்தும் மக்கள் வேலைகளை இழந்து வருகின்றனர். கடந்த கிழமை மட்டும் மொத்தம் 1.43 மில்லியன் மக்கள் வேலை இழப்பு உதவி தொகைக்கு (unemployment benefits) விண்ணப்பித்து உள்ளனர்.

ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் 15% ஆக இருந்த வேலை அற்றோர் வீதம், ஜூன் மாதம் 11.1% ஆக குறைந்து உள்ளது.

வேலை அற்றோர் தமது கொள்வனவுகளை குறைக்க, தனியார் நுகர்வும் (personal consumption) 34.6% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க அரசு பல டிரில்லியன் பணத்தை தானமாக வழங்கி இருந்தும் பொருளாதார சரிவை கட்டுப்படுத்த முடியவில்லை.
.