அமெரிக்க காங்கிரஸிடம் $106 பில்லியன் பெறும் நோக்கில் காங்கிரஸ் சென்று உரையாற்ற முனைந்த பைடெனின் செயலாளர் Antony Blinken உரையை ஆரம்பிக்க முன் சபையில் இருந்த மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். காங்கிரஸ் வழங்கும் பணத்தையே அமெரிக்க சனாதிபதி செலவழிக்கலாம்.
மேற்படி $106 பில்லியனில் $14.3 பில்லியன் இஸ்ரேலின் காஸா மீதான போருக்கு வழங்கப்பட உள்ளது. காஸா மீதான யுத்தத்துக்கு பணம் வழங்குவதையே போராட்டக்காரர் எதிர்த்தனர். இவர்களில் பெரும்பாலானோர் வெள்ளை இனத்தவர்.
ஆர்பாட்டக்காரரில் CODEPINK என்ற குழுவும் இருந்துள்ளது. இந்த குழு யுத்தங்களுக்கு எதிரானது.
இவர்கள் Ceasefire in Gaza, Free Gaza, Stop funding genocide போன்ற கூற்றுகளை முன்வைத்திருந்தார். சிலர் இரத்தம் படிந்த கைகளை பிரதிபலிக்கும் நோக்கில் வர்ணம் பூசிய கைகளை கொண்டிருந்தனர்.
போலீசார் ஆர்பாட்டக்காரரை வெளியேற்றி, 12 பேரை கைதும் செய்துள்ளனர்.
இரண்டாம் உலக யுத்தம் முடிந்த காலத்தில் இருந்து அமெரிக்கா சுமார் $160 பில்லியன் பணத்தை இஸ்ரேலுக்கு வழங்கி உள்ளது.