அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு கணை தோல்வியில்

Missile-interceptor

அமெரிக்காவும் ஜப்பானும் இணைந்து உருவாக்கி, இன்று புதன் ஏவி ஒத்திகை பார்த்த ஏவுகணை எதிர்ப்பு கணை (interceptor missile) பயிற்சி இலக்கை தாக்கி அழிக்காது தோல்வியில் முடிந்துள்ளது. SM-3 Block IIA என்ற இந்த ஏவுகணை எதிர்ப்பு கணை Hawaii பகுதியில் இன்று ஒத்திகை செய்யப்பட்டது.
.
கடந்த வருடம் பெப்ருவரி மாதம் செய்யப்பட்ட இவ்வகை ஒத்திகை ஒன்று வெற்றிகரமாக பயிற்சி இலக்கை தாக்கி இருந்தது. ஆனால் பின் ஜூன் மாதம் செய்யப்பட்ட ஒத்திகை தோல்வியில் முடிந்து இருந்தது. இன்று மீண்டும் ஒத்திகை தோல்வியில் முடிந்துள்ளது.
.
வடகொரியாவின் ஏவுகணைகளில் இருந்து தம்மை பாதுகாக்க ஜப்பான் இந்த ஏவுகணை எதிர்ப்பு கணைகள் நான்கை $133 மில்லியன் செலவில் பெறவுள்ளது.
.
அமெரிக்க அரசு இன்றைய ஒத்திகை தோல்வியை இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
.
இந்த interceptor தரையில் இருந்து அல்லது யுத்த கப்பலில் இருந்து ஏவப்படக்கூடியது.

.