அமெரிக்காவின் உயர்நீதிமன்ற (Supreme Court) நீதிபதி Clarence Thomas இலஞ்சம் பெற்றாரா என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது. அமெரிக்க அரசில் வெள்ளைமாளிகை, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்கும் அடுத்து மூன்றாவதாக இயங்குவது உயர்நீதிமன்றம். இது தற்போது 9 நீதிபதிகளை கொண்டது.
1999ம் ஆண்டு Thomas பொதுவாக RV எனப்படும் உல்லாச பயண பஸ் (Recreational Vehicle) ஒன்றை $267,230 பெறுமதிக்கு கொள்வனவு செய்திருந்தார். Prevost Le Mirage XL Marathon என்ற 40 அடி நீள இந்த உல்லாச பயண பஸ்சுக்கான கட்டணத்தை Anthony Welters என்ற செல்வந்தர் செலுத்தியதாக கூறப்படுகிறது.
Thomas தனது நண்பரான Welters ரிடம் இருந்து முதலில் கடன் பெற்று தனது RV யை கொள்வனவு செய்ததாகவும் பின் 2007ம் ஆண்டில் கடனை “satisfied” செய்ததாகவும் இருவரும் கூறுகின்றனர். ஆனால் satisfied என்ற சொல்லின் விளக்கத்தை அவர்கள் தெரிவிக்க மறுக்கின்றனர்.
கடனை முற்றாக அல்லது பகுதியாக கைவிடுவதும் satisfied என அழைக்கப்படலாம். சட்டப்படியான ஆவணங்கள் எதிலும் Thomas கடனை அடைத்தமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்த கடன் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை.
கருப்பு இனத்தவரான Thomas, Welters ஆகிய இருவரும் இளம் வயதில் மிகவும் வறிய வாழ்க்கையை நண்பராக கொண்டிருந்தவர்கள். பின் Thomas நீதிபதியாக, Welters வர்த்தகத்தில் பெரும் பணம் உழைத்தார்.