அமெரிக்க படைகளின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் படைகள் மேற்கொண்ட இராணுவ தாக்குதலுக்கு திருமண வீடு ஒன்றில் இருந்த 40 பொதுமக்கள் பலியாகி உள்ளனர். ஞாயிரு இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு மேலும் 12 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
.
Musa Qala என்ற பகுதியில், திருமண வீட்டுக்கு அருகில் தலபான்கள் பயிற்சி பெறுவதாக கூறியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
.
ஆனால் ஆப்கானிஸ்தான் அரச படைகள் தாம் 22 தலபான்களை கொலை செய்ததாகவும், 14 பேரை கைது செய்ததாகவும் கூறியுள்ளன.
.
ஒரு கிழமைக்கு முன்னரும் அமெரிக்க விமானம் வீசிய குண்டுக்கு 30 பொதுமக்கள் ஆப்கானிஸ்தானில் பலியாகி இருந்தனர்.
.
2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரையான 20 மாத காலத்தில் அமெரிக்கா 11,845 குண்டுகளை ஆப்கானிஸ்தாளில் வீசியுள்ளது. ஆனால் 2013 முதல் 2017 ஆண்டு வரையான 11.768 குண்டுகளை மட்டுமே அமெரிக்கா அங்கு வீசியிருந்தது.
.