தாம் புதிய வகை ஏவுகணை ஒன்றை ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்ததாக இன்று திங்கள் அமெரிக்காவின் பென்ரகன் அறிவித்து உள்ளது. கலிபோர்னியாவின் San Nicolas தீவில் இருந்து ஏவப்பட்ட இந்த சோதனை ஏவுகணை 500 km சென்று சோதனை குறியை தாக்கியதாக கூறப்படுகிறது.
.
1987 ஆம் ஆண்டு றேகனும், கொர்பசோவும் செய்துகொண்ட INF என்ற இணக்கப்படி 500 km முதல் 5,500 km தூரம்வரை பாயும் ஏவுகணைகளை சோதனை செய்வது தடை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ரஷ்யா, Novator 9M729 ஐ சோதனை செய்ததன்மூலம், அந்த தடையை மீறிவிட்டது என்று ரம்ப் அரசு கூறி, தாமும் INF உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக கூறி இருந்தது.
.
தற்போதைய நிலை 1987 ஆம் ஆண்டில் இருந்த நிலையிலும் மாறுபட்டது. அப்போது சீன இராணுவம் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. தற்போது அமெரிக்காவின் முதல் போட்டியாக சீனாவே கருதப்படுகிறது.
.
சீனாவையும் INF போன்ற உடன்படிக்கையுள் இழுக்க முனைகிறது அமெரிக்கா.
.