அமெரிக்கா-துருக்கி விசா இடைநிறுத்தம்

Turkey

துருக்கியர் அமெரிக்கா செல்வதற்கான non-immigrant விசா சேவையும், அமெரிக்கர் துருக்கி செல்வதற்கான non-immigrant விசா சேவையும் இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. அண்மையில் துருக்கியில் உள்ள அமெரிக்க தூதுவராலய ஊழியர் ஒருவர் துருக்கி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னரேயே இந்த முறுகல் நிலை உக்கிரம் அடைந்துள்ளது.
.
கடந்த கிழமை இஸ்தான்புல் நாகரில் வைத்து ஒரு அமெரிக்க தூதுவராலய ஊழியர் அங்கு அண்மையில் இடம்பெற்ற இராணுவ ஆட்சி கவிழ்ப்பில் செயல்பட்டு இருந்தார் என்று கூறி கைது செய்யப்பட்டு இருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் அமெரிக்கா துருக்கியில் இருந்தான non-immigrant விசா சேவையை இடைநிறுத்தியது. அதை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள துருக்கி தூதுவராலயமும் non-immigrant விசா சேவையை இடைநிறுத்தம் செய்தது.
.
துருக்கி அரசை கவிழ்க்க 2016 ஆம் ஆண்டில் ஒரு இராணுவ சதி செய்யப்பட்டது. ஆனால் அந்த சதி ஜனாதிபதி Tayyip Erdogan அவர்களால் உடனடியாக முறியடிக்கப்பட்டது. இந்த சதிக்கு 240 பேர் -பலியாகி இருந்தனர்.
.
அமெரிக்காவில் குடியிருக்கும் Fethulla Gulen என்பவரே இந்த சதியை நடத்தியதாகவும், அவரை அமெரிக்கா துருக்கிக்கு நாடுகடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆனால் அமெரிக்கா அவ்வாறு செய்ய மறுக்கிறது.
.
NATO நாடான துருக்கிக்கு அமெரிக்கா போன்ற பல NATO நாடுகளுக்கும் இடையில் அண்மைக்காலங்களில் பெரும் முறுகல் நிலை தோன்றியுள்ளது.
.