அமெரிக்காவும், சீனாவும் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நேரடி பேச்சுக்களை விரைவில் மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இருதரப்பும் இந்த விசயம் தொடர்பாக முறைப்படி அறிவிப்புகள் எதையும் இதுவரை செய்யவில்லை.
முன்னாள் சனாதிபதி ரம்ப் ஆட்சிக்காலத்தில் முறிந்துபோன அமெரிக்க-சீன உறவை மீண்டும் புதுப்பிக்க பைடென் ஆட்சியில் உள்ள அமெரிக்கா முனைகிறது.
அலாஸ்காவின் Anchorage நகரில் இடம்பெறக்கூடும் இந்த பேச்சில் சீனாவின் Yang Jiechi மற்றும் Wang Yi கலந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா தரப்பில் Antony Blinken கலந்து கொள்ளலாம்.
இது தொடர்பாக அமெரிக்காவிடம் நிருபர்கள் கேட்டபோது அவ்வகை நேரடி பேச்சு ஒன்றுக்கு தாம் முனைவதாகவும் ஆனால் இதுவரை திகதிகள் தீர்மானிக்கப்படவில்லை என்றும் வெள்ளைமாளிகை பேச்சாளர் கூறியுள்ளார்.