சிரியா, துருக்கி, ஈராக், ஈரான் ஆகிய நாடுகள் சந்திக்கும் பகுதியில் வாழும் Kurd மக்கள் ஒரு தனிநாடு அமைக்கும் முயற்சியில் எப்போதுமே முனைந்து வந்துள்ளனர். அதற்காக PKK என்ற குழு ஆயுத போராட்டத்திலும் இறங்கி இருந்தது. அவர்கள் துருக்கியிலும் தாக்குதல்களை செய்து வந்திருந்தனர். துருக்கி ஒரு NATO நாடு என்பதால், அமெரிக்கா உட்பட பெரும்பாலான மேற்கு நாடுகள் PKK அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகவே கூறி வந்தன.
.
ஆனாலும் PKK சார்பு குழுக்கள் சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் செய்யும் போருக்கு உதவியும் செய்து வந்திருந்தன மேற்கு நாடுகள்.
.
அண்மையில் IS ஈராக்குள் வளர்ந்த போது அதை அழிக்க அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் YPG என்ற PKK கிளை குழுவை உருவாக்கி பயிற்சிகள் வழங்கி, ஆயுதம் வழங்கி வந்திருந்தன. அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் உதவியுடன் YPG குழுவும் சிரியாவின் சுமார் 25% நிலத்தையும் தமது கட்டுப்பாட்டுள் எடுத்திருந்தது. அவர்களுக்கு அங்கு நிலை கொண்டிருந்த அமெரிக்க வான்படை பாதுகாப்பு வழங்கி வந்திருந்தது.
.
தற்போது ரம்ப் சிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகளை முற்றாக திருப்பி அழைக்கவுள்ளதால், YPG அச்சம் கொண்டுள்ளது. சிரியா-துருக்கி எல்லை பகுதியான Manbji யில் உள்ள தம்மை துருக்கி தாக்கலாம் என்ற பயத்தால், YPG தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு சிரியாவின் அரசை, தமது முன்னாள் எதிரியை, கேட்டுள்ளது. யுத்தம் இன்றி தனது நாட்டின் பகுதிகளை மீட்க்கும் நோக்கில் சிரியாவும் சந்தோசமாக பாதுகாப்புக்கு விரைகிறது (இது புலிக்கு பிரேமதாசா பாதுகாப்பு வழங்கியது போல).
.
YPG சிரியாவின் அரசுடன் தொடர்பு கொள்ள முன்னர் அந்த விடயம் தொடர்பாக அமெரிக்காவுக்கு எதையும் கூறி இருக்கவில்லை. இதானால் விசனம் கொண்டுள்ளது அமெரிக்கா.
.
சிரியாவின் நட்பு நாடுகளான ரஷ்யாவும், ஈரானும் YPG குழுவின் நகர்வை பாராட்டி உள்ளன.
.