அமெரிக்கா கட்டிய காசா தற்காலிக துறை உடைந்தது

அமெரிக்கா கட்டிய காசா தற்காலிக துறை உடைந்தது

காசா அகதிகளுக்கு உணவு, மருந்து போன்ற உதவிகளை கடல் மூலம் வழங்க அமெரிக்கா கட்டிய தற்காலிக இறங்குதுறை உடைந்துள்ளது. அதனால் காசாவுக்கான இந்த கடல் வழி உதவிகளும் தடைப்பட்டுள்ளன.

அமெரிக்கா வழங்கும் அரசியல், ஆயுத, பொருளாதார உதவிகளை கொண்டு இஸ்ரேல் தரை மூலம் காசா செல்லும் உதவிகளை தடுத்தபோது, அமெரிக்கா காசா கரையில் $320 மில்லியன் செலவில் கட்டிய மேற்படி தற்காலிக இறங்கு துறை மூலம் உதவிகளை வழங்க திட்டமிட்டது.

இந்த கடல் வலி துறை மூலம் நாள் ஒன்றுக்கு 150 truckloads உதவிகள் வழங்கப்படும் என்று அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால் இந்த துறை மூலம் மே 24ம் திகதி வரை 1,000 மெட்ரிக் தொன் உதவிகள் மட்டுமே காசா சென்றுள்ளன. இந்த வழி தடைகளுக்கு பல காரணங்கள் கூறப்பட்டன.

தற்போது உடைந்துள்ள இறங்கு துறையை இஸ்ரேல் எடுத்து சென்று, திருத்தி, மீண்டும் காசா எடுத்து வர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு பல கிழமைகள் தேவைப்படும்.

யுத்தத்துக்கு முன் காசாவுக்கு தினமும் 500 truckloads பொருட்கள் சென்றிருந்தன.