ஜெர்மனி மக்களுக்கு அமெரிக்கா மீது இருந்த நல்லெண்ணம் குறைந்து, அதேவேளை சீனா மீதான நல்லெண்ணம் அதிகரித்து உள்ளதாக கருத்து கணிப்பு ஆய்வு ஒன்று அறிந்துள்ளது. குறிப்பாக கரோனா வரைஸ் தொடர்பான அமெரிக்க சனாதிபதி ரம்ப் அரசின் செயல்பாடுகளே ஜெர்மன் நாட்டவருக்கு விசனத்தை உருவாகியுள்ளது. ஜெர்மனியின் Koerber Institute என்ற அமைப்பும், அமெரிக்காவின் Pew Institute என்ற அமைப்பும் இந்த கருது கணிப்பு ஆய்வை செய்துள்ளன.
.
மேற்படி கணிப்பின்படி 73% ஜெர்மனியினர் அமெரிக்கா மீதான தமது நல்லெண்ணம் குறைத்து உள்ளது என்றுள்ளனர். அத்துடன் 47% ஜெர்மனியினர் மட்டுமே அமெரிக்காவுடனான உறவுக்கு தமது நாடு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டில் இந்த இத்தொகை 50% ஆக இருந்தது.
.
அதேவேளை 36% ஜெர்மனியினர் சீனாவுடனான உறவுக்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டில் இத்தொகை 24% ஆக மட்டுமே இருந்தது.
.
இரண்டாம் உலகயுத்த காலத்தில் இருந்து அமெரிக்க-ஜெர்மன் உறவு பலமாக இருந்திருந்தாலும் ரம்ப் ஆட்சியில் உறவு பலமாக முறிந்து உள்ளது. சில மாதங்களுக்கு முன் “ரம்ப் போல் ஒரு நண்பர் இருக்க, எமக்கு எதிரி எதற்கு” என்று ஒரு ஜெர்மன் அரசியல்வாதி கூறியிருந்தார்.
.
ரம்ப் மீதான வெறுப்பு காரணமாக ஜெர்மனியினர் அமெரிக்காவை வெறுத்தாலும், ரம்ப் ஆட்சியின் பின் நிலைமை வழமைக்கு திரும்பலாம். ஜெர்மனியும், சீனாவும் வர்த்தகத்தில் இணைந்தாலும், அவர்களின் இராணுவங்கள் தொலைவிலேயே இருக்கும். ஜெர்மனில் தற்போதும் சுமார் 40,000 அமெரிக்க படைகள் உள்ளன. அவர்களின் பிரதான பணி ரஷ்யாவை கண்காணிப்பதே.
.