அமெரிக்காவை கைவிடும் பட்டதாரிகளும், ஆய்வாளரும்

அமெரிக்காவை கைவிடும் பட்டதாரிகளும், ஆய்வாளரும்

அமெரிக்க சனாதிபதியின் மிரட்டல்கள் காரணமாக பெருமளவு பட்டதாரி மாணவர்களும், விஞ்ஞான ஆய்வாளரும் அமெரிக்காவை விட்டு வெளியேறி வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் இணைகின்றனர்.

அமெரிக்காவுக்கு மாணவ விசாவில் சென்றவர்கள் மட்டுமன்றி ஏற்கனவே அமெரிக்காவின் Green card பெற்றவர்களும் வேறு நாடுகளுக்கு நகர்கின்றனர்.

பிரான்சின் Aix-Marseille University மட்டும் 298 தற்போதைய அமெரிக்க மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுள்ளது. அதில் 242 மாணவர்கள் ஏற்கனவே சாதகமான பதிலை பெற்றுள்ளனர். 1409ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் பிரான்சின் பழையதோர் பல்கலைக்கழகம்.

மேற்படி மாணவர்களில் 135 பேர் அமெரிக்கர், 45 பேர் இரட்டை குடியுரிமை கொண்டோர், 17 பேர் பிரெஞ்சு மாணவர், 45 பேர் ஏனைய நாட்டவர் என்கிறது Aix-Marseille பல்கலைக்கழகம்.

மேற்படி மாணவர் அமெரிக்காவின் Johns Hopkins பல்கலைக்கழகம், NASA, University of Pennsylvania, Columbia University, Yale, Stanford University போன்ற பல்கலைக்கழகங்களை கைவிட்டு வெளியேறுகின்றனர்.

கடந்த மாத Nature என்ற விஞ்ஞான வெளியீடு சுமார் 1,200 ஆய்வாளர் ரம்பின் மிரட்டல்கள் காரணமாக தாம் கனடா அல்லது ஐரோப்பா நோக்கி நகரவுள்ளதாக கூறியுள்ளனர்.