கனடியர் அமெரிக்கா செல்வது பெப்ரவரி மாதம் 40% ஆல் குறைந்து உள்ளது என்று Flight Centre கூறியுள்ளது. தரை மூலம் கனடாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பயணிகள் தொகை பெப்ரவரி மாதம் 500,000 ஆல் குறைந்து உள்ளது என்றும் கூறப்படுகிறது.
2024ம் ஆண்டு மார்ச் மாதம் 2.13 மில்லியன் கனடியர் கார் மூலம் அமெரிக்கா சென்று இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் 1.45 மில்லியன் கனடியர் மட்டுமே கார் மூலம் அமெரிக்கா சென்று இருந்தனர். அது சுமார் 32% வீழ்ச்சி.
கடந்த 3 மாதங்களில் சுமார் 20% கனடியர் ஏற்கனவே பதிவு செய்த தமது அமெரிக்க பயணங்களை இரத்து செய்துள்ளனர்.
அமெரிக்கா செல்லும் பயணிகள் தொகை குறைந்து வருவதால் விமான சேவைகளும் அமெரிக்காவுக்கான ஆசன தொகைகளை குறைத்து உள்ளன அல்லது சேவைகளை குறைத்து உள்ளன.
2024ம் ஆண்டு கனடியர் அமெரிக்காவில் $20.5 பில்லியனை செலவு செய்ததாகவும் அத்தொகை இந்த ஆண்டு பலத்த வீழ்ச்சியை அடையும் என்று கருதப்படுகிறது.
கனடிய snow birds (winter குளிர் காலங்களில் அமெரிக்கா சென்று 6 மாதங்கள் வரை வாழும் ஓய்வு பெற்ற கனடியார்) அமெரிக்கா செல்வதை தவிர்ப்பதும் அமெரிக்காவுக்கு பெரும் இழப்பாகும்.