செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு 3 மற்றும் 5 வயதுடைய சகோதர சிறுமிகள் மெக்ஸிகோ பக்கத்தில் இருந்து அமெரிக்காவுள் வீசப்பட்டு உள்ளனர். சகோதர சிறுமிகளை அகதி நிலைக்கு விண்ணப்பிப்பதே நோக்கம். இந்த சகோதர சிறுமிகள் Ecuador நாட்டினர் என்று அமெரிக்கா அறிந்துள்ளது.
அடையாளம் காணப்படாத இரு பெரியவர் இரண்டு சிறுமிகளையும் இரவு நேரம் மெக்ஸிக்கோ பக்கத்தில் இருந்து 14 அடி உயர எல்லை வேலிக்கு மேலால் போட்டு தப்பி ஓடி உள்ளனர். இந்த நிகழ்வு night vision வீடியோவில் பதிவாகி உள்ளது.
பைடென் சனாதிபதியான காலத்தில் இருந்து பெருமளவு தென் மற்றும் மத்திய அமெரிக்க சிறுவர்கள் அமெரிக்காவை நோக்கி படை எடுத்துள்ளனர். சிறுவர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார் என்று அவர்கள் கருதுவதே காரணம். தற்போது தினமும் சுமார் 500 சிறுவர்கள் அமெரிக்காவுள் நுழைவதாக கூறப்படுகிறது.
மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுள் போதை கடத்தி பெறும் இலாபத்திலும் அதிகமான பணத்தை அகதிகளை கடத்தி பெறுவதாக கூறப்படுகிறது.