அனைத்து Boeing தயாரிப்பான 737 MAX-8 மற்றும் மேலதிக நீளம் கொண்ட MAX-9 விமானங்களையும் சேவையில் இருந்து நீக்குமாறு அமெரிக்கா இன்று கட்டளை இட்டுள்ளது. முதலில் சீனாவே மேற்படி விமான பாவனைக்கு எதிராக இவ்வாறு முழு தடையை விதித்து இருந்தது. கூடவே இந்தோனேசியாவும், வேறு சில நாடுகளும் தடையை விதித்தன.
.
பின்னர் ஐரோப்பாவையும் தமது வான்பரப்புள் இந்த விமானத்தை தடை செய்தன. இறுதியில் இன்று அமெரிக்காவும், கனடாவும் தடையை விதித்து உள்ளன.
.
இந்த தடைகள் இந்தோனேசிய மற்றும் எதியோப்பிய விமான விபத்துகளின் விசாரணனைகள் முடியும்வரை நீளலாம்.
.
இந்த தடை அமெரிக்காவின் Boeing விமான தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவே. சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விமானம் மிகவும் பிரபலம் அடைந்து இருந்தது. இதுவரை சுமார் 5,000 இவ்வகை விமானங்களுக்கு கொள்வனவு இணக்கங்கள் கிடைத்துள்ளதாகவும், ஏற்கனவே சுமார் 350 விமானங்கள் கையளிக்கப்பட்டு சேவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
.
விபத்துக்கு உள்ளான விமானங்களின் black-box ஆய்வுகள் இதுவரை முடிவு பெறாவிடினும், Flight Radar போன்ற விமான அவதானிப்பு நிறுவனங்களின் தரவுகளின்படி இரண்டு விமானங்களும், விபத்துக்கு முன்னர், திடீரென கீழ் நோக்கி, மறுகணம் மேல்நோக்கி பறக்க முனைந்துள்ளன.
.