கடந்த மே மாதம் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு நேரடியாக பறக்கும் விமானங்களில் வரும் பயணிகள் தமது கைபைகளில் கணனிகள், பெரிய புகைப்பட கருவிகள் கொண்டிருப்பது தடை செய்யப்பட்டு இருந்தது. மொத்தம் 10 மத்தியகிழக்கு விமான நிலையங்களில் இருந்து அமெரிக்கா வரும் 8 விமான சேவைகள் இந்த கட்டுப்பாட்டால் பாதிப்பு அடைந்து இருந்தன. சில விமான சேவைகள் அமெரிக்காவுக்கான தமது சேவைகளை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.
.
.
இன்று புதன் டுபாயில் இருந்துவரும் Emirates விமான சேவை இந்த கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது. மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் இந்த விமான சேவை மூலம் அமெரிக்கா வரும் பயணிகள் கணனிகள், பெரிய இலத்திரனியல் உபகாரங்கள் ஆகியவற்றை கொண்டிருக்க அனுமதிக்கப்படும்.
.
.
ஏற்கனவே அபுதாபியில் இருந்து வரும் Etihad விமான சேவைக்கும், துருக்கியில் இருந்து வரும் Turkish Airlines சேவைக்கும் இவ்வாறு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டு உள்ளன.
.
.
சவுதியில் இருந்துவரும் Saudi Arabian Airlines சேவை மீதான தடையும் ஜூலை 19 ஆம் திகதி முதல் விலக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
.
.
ஏனைய விமான சேவைகள் மீதான தடைகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
.