அமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாநிலத்தில் Ceylon Lagoon என்ற ஒரு சிறிய நீர் பரப்பு உண்டு. இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கையின் பெயரில் வடஅமெரிக்காவில், அமெரிக்க-கனேடிய எல்லையோரமாக உள்ள இந்த குடா தனக்குள்ளே ஒரு பெரும் கதையையே கொண்டுள்ளது.
.
.
Geneva Lake என்ற வாவி Wisconsin மாநிலத்தவர்களுக்கும் அதை அண்டிய மாநிலத்தவர்களுக்கும் ஒரு கோடைகால சுவர்க்கம். சுமார் 12 km நீளத்தையும், 22 சதுர km பரப்பளவையும் கொண்ட இந்த வாவி அருகே, கிழக்கு பக்கமாக, ஓர் சிறு குடா உண்டு. அந்த குடாவே Ceylon Lagoon என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ளவர் எவரை கேட்டாலும் Ceylon Lagoon அமைத்துள்ள திசையை காட்டுவார்கள். ஆனால் அவர்களுள் பலருக்கு Ceylon என்ற சொல்லின் காரணம் தெரியாது.
.
.
1893 ஆண்டில், இன்றைக்கு 124 வருடங்களுக்கு முன்னர், அமெரிக்காவின் Chicago நகரில் Chicago Columbian Exposition என்ற வர்த்தக நிகழ்வு நடாத்தப்பட்டது. அந்த நிகழ்வு Christopher Columbus அமெரிக்காவை அடைந்து 400 வருடங்கள் பூர்த்தியானதை கொண்டாடும் விழா.
.
அந்த விழாவில் பிரித்தானிய அரசியின் (Queen Victoria) ஆணைப்படி Ceylon Court என்ற பெயரில் புத்த கோவிலை ஒத்த கொட்டகையும் ஒன்றும் போடப்பட்டு இருந்தது. அப்போது Ceylon என்று அழைக்கப்பட்ட இலங்கை பிரித்தானிய அரசியின் ஆட்சியில் இருந்தது. அரசியின் நோக்கம் அமெரிக்காவில் இலங்கையின் தேயிலை, வாசனை திரவியங்கள் என்பவற்றை சந்தைப்படுத்தலே ஆகும்.
.
விழாவின் பின் Lake Geneva வாசியான Frank Chandler என்பவர் Ceylon Court என்ற கொட்டகையை கொள்வனவு செய்து, Lake Geneva பகுதிக்கு எடுத்து சென்றுள்ளார். அங்குள்ள Button’s Bay என்ற பகுதியில் குடியிருப்பு கொட்டகையாக அவர் அதை பயன்படுத்தி இருந்தார்.
.
1901 ஆம் ஆண்டில் இந்த கொட்டகை John J. Mitchell என்பருக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. Mitchell ஒரு செல்வந்த வாங்கியாளர். அவரின் பெயரால் இன்றும் Mitchell Tower என்ற ஒரு பழைய, அழகிய கட்டிடம் University of Chicagoவில் உள்ளது.
.
Mitchell மரணத்தின் பின் F. L. Maytag என்பவர் மேற்படி Ceylon Court என்ற கொட்டகையை கொள்வனவு செய்துள்ளார். அதை அவர் பின்னர் அவரின் மகன் E. M. Maytag என்பருக்கு வழங்கி உள்ளார். மகனின் மரணத்தின் பின் Ceylon Court இருந்த நிலம் பங்கு போடப்பட்டது. அப்போது, 1958 ஆம் ஆண்டில், கொட்டகை ஏலத்தில் விற்கப்பட்டு உள்ளது.
.
பின்னர் அந்த கொட்டகை தீயணைப்பு படையால் எரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அக்காலத்திலேயே அங்குள்ள சிறிய நீர் பரப்பு ஒன்று Ceylon Lagoo என்று பெயரிடப்பட்டு உள்ளது.
.
Ceylon Court எச்சங்கள் தற்போதும் Geneva Lake Museum என்ற நூதனசாலையில் உள்ளன.
.