அமெரிக்காவில் $900 மில்லியன் லொத்தர்

PowerBall

இன்று சனிக்கழமை அமெரிக்காவின் மிகப்பெரிய லொத்தர் சீட்டிழுப்பு இடம்பெறவுள்ளது. Powerball என்ற லொத்தரின் பெறுமதி சுமார் US$ 900 மில்லியன் ($900,000,000) ஆகும். இது அமெரிக்காவில் வழங்கப்பட்ட மிகக்கூடிய பெறுமதியாக இருக்கும்.
.
மற்றைய நாடுகளை போல் அல்லது அமெரிக்காவில் லொத்தர் வருமானங்களுக்கும் அரச வரிகள் செலுத்தப்பட வேண்டும். அதனால் தனியொருவர் இந்த லோத்தரை வென்றால் அவருக்கு, மத்திய அரச வரி செலுத்தியபின், சுமார் $350 மட்டுமே கிடைக்கும். ஒருசில அமெரிக்க மாநிலங்கள் தவிர மற்றைய எல்லாம் மாநில வரியையும் அறவிடும். அதானல் சிலவேளைகளில் சுமார் $300 மில்லியன் மட்டுமே இறுதியில் கிடைக்கும்.
.
இன்று இரவு எவரும் முதல் தொகையை வெல்லாது விடின் அடுத்தமுறையின் முதல் பரிசு ஒரு பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும்.
.
இதற்கு முன் 2012 ஆம் ஆண்டில் MegaMillions என்ற லொத்தர் $656 மில்லியன் பெறுமதியை 3 நபர்களுக்கு சமமாக பிரித்து வழங்கி இருந்தது.
.
உலகின் மிக பெரிய லொத்தர் இஸ்பெயின் நாட்டில் வழங்கப்பட்டு இருந்தது. அங்கு Sorteo Extraordinario de Navidad என்ற லொத்தர் 2012 ஆம் ஆண்டில் வழங்கிய தொகை சுமார் $942 மில்லியன்.
.