அமெரிக்காவின் New Orleans என்ற நகரில் 15 பேர் வாகனம் ஒன்று மூலம் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த தாக்குதலுக்கு பின்னால் ISIS என்ற ஆயுத குழு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Shamsud-Din Jabar என்பவர் ஒரு pick-up வண்டியை French Quarter என்ற New Orleans நகர் பகுதி வீதியில் இருந்த மக்கள் ஊடு செலுத்தி மேற்படி படுகொலையை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வண்டியை செலுத்தியவர் ஒரு முன்னாள் அமெரிக்க இராணுவத்தினர் என்பதுவும் இங்கே குறிப்பிடத்தக்கது. இவர் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 82nd Airborne Division உறுப்பினரான இவர் 42 வயதுடையவர்.
ISIS குழுவின் கொடி ஒன்று மேற்படி pick-up வாகனத்தில் இருந்துள்ளது.
இன்னோர் Tesla Cybertruck அமெரிக்காவின் Las Vegas என்ற சூதாட்ட நகரில் உள்ள Trump Hotel க்கு வெளியே வெடித்துள்ளது. இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளதா என்பதை போலீசார் ஆராய்கின்றனர்.