அமெரிக்காவில் வேலை இழந்தோர் 6.648 மில்லியன்

Coronavirus

அமெரிக்காவில் கடந்த கிழமை கொரோனா காரணமாக தமது தொழிலை இழந்து காப்புறுதிக்கு (unemployment) விண்ணப்பித்தோர் தொகை 6.648 மில்லியன் ஆக அதிகரித்து உள்ளது. அதற்கு முந்திய கிழமை 3.307 மில்லியன் தொழிலாளர் தமது தொழிலை இழந்து காப்புறுதிக்கு விண்ணப்பித்து இருந்தனர். வரலாற்றில் இதற்கு முன், 1982 ஆம் ஆண்டே ஒரு கிழமையில் 695,000 பேர் தமது தொழிலை இழந்து இருந்தனர்.
.
மேலும் பலர் அரச அலுவலகங்களை இலகுவில் அடைய முடியாத நிலை தொடர்வதால், வேலைவாய்ப்பை இழந்தோர் தொகை 6.648 க்கும் மேலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
.
தற்போது உலக அளவில் 956,588 ஆக உள்ள கொரோனா தொற்றியோர் தொகை விரைவில் 1 மில்லியன் ஆக அதிகரிக்கும் நிலையில் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் தொகை எதிர்பார்த்ததுக்கும் அதிகமாக உள்ளது. உலக அளவில் இதுவரை மரணித்தோர் தொகை 48,583 ஆகி உள்ளது.
.
மரணித்தோர் தொகையும் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. நியூ யார்க் பகுதியில் மட்டும் 2,700 பேர் வரை பலியாகி உள்ளனர். புதன்கிழமை மட்டும் அமெரிக்காவில் 1,040 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை இத்தாலியில் 13,155 பேரும், ஸ்பெயினில் 10,003 பேரும், அமெரிக்காவில் 5,138 பேரும், பிரான்சில் 4,043 பேரும், சீனாவில் 3,322 பேரும் பலியாகி உள்ளனர்.
.
அமெரிக்காவில் தற்போது 216,722 பேர் கொரோனா தொற்றி உள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து இத்தாலியில் 110,574 பேர் வைரஸ் தொற்றி உள்ளனர். ஸ்பெயினில் 110,238 பேர் தொற்றி உள்ளனர்.
.
அதேவேளை Antonov 124 வகை ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று ரஷ்யா வழங்கும் masks போன்ற வைத்திய உபகரணங்களுடன் நியூ யார்க் நகரம் சென்றுள்ளது.
.
ரம்ப் அரசுக்கு அப்பால் சென்று Massachusetts மாநிலம் நேரடியா 1.2 மில்லியன் N95 mask களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. New England Patriot என்ற விளையாட்டு அணியின் விமானம் ஒன்றே இவற்றை சீனாவில் இருந்து Boston நகருக்கு எடுத்து வருகிறது. அதில் 300,000 ஐ நியூ யார்க்கு வழங்க இணங்கி உள்ளனர். அதேவேளை Warren Buffet க்கு சொந்தமான சிறிய விமானம் ஒன்று 130,000 mask களை சீனாவின் வைத்தியசாலை ஒன்றில் இருந்து நியூ யார்க் எடுத்து செல்கிறது.
.