அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இன்மை 14.7%

USFlag

அமெரிக்காவின் Department of Labor வெள்ளிக்கிழமை விடுத்த அறிவிப்பின்படி ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு இன்மை 14.7% ஆக உயர்ந்து உள்ளது. அமெரிக்காவின் வரலாற்று பதிவில் என்றைக்குமே இந்த அளவு வேலைவாய்ப்பு இன்மை உயர்ந்து இல்லை.
.
1947 ஆண்டுக்கு பின், 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வேலைவாய்ப்பு இன்மை 10% ஆகவும், 1982 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10.8% ஆகவும், இருந்துள்ளன.
.
1929 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு இன்மையை கணிக்க 14 வயது ஆரம்ப வயதாக இருந்தது. அதனை பின்னர் 16 வயதே ஆரம்ப வயதாகியது.
.
ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் உல்லாச துறை 7.6 மில்லியன் வேலைகளை இழந்து உள்ளது. சிறு வர்த்தகங்களும் வைத்திய துறையும் 2.1 மில்லியன் தொழில்களை இழந்து உள்ளன. உற்பத்தி துறை 1.3 மில்லியன் தொழில்களையும், முத்தரப்பு அரசுகள் 980,000 தொழில்களையும் இழந்து உள்ளன.
.
மே மாத வேலைவாய்ப்பு இன்மை 22% வரை உயரலாம் என்று சில தரவுகள் கணிக்கின்றன.
.