நீண்ட காலமாக அமெரிக்காவை Democratic கட்சியும், Republican கட்சியும் மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. ஒரு முறை தண்டிக்கப்படும் கட்சி அதை மறந்து மறுமுறை ஆட்சியில் அமர்த்தப்படும். ஆனால் தற்போது சில அமெரிக்கர் இந்த இரண்டு கட்சிகளிலும் வெறுப்பு கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் 3ம் கட்சி ஒன்று தலைதூக்க முனைகிறது. Democratic, Republican ஆகிய இரண்டு கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்களே ஒன்றாக இணைந்து No Labels கட்சியை ஆரம்பிக்கின்றனர்.
சுமார் 80% அமெரிக்கர் Democratic கட்சியின் பைடென் 2024ம் ஆண்டு தேர்தலுக்கு மிகவும் வயது முதிர்ந்தவர் என்று கருதுகின்றனர். அத்துடன் 75% அமெரிக்கர் பைடென் 2024ம் ஆண்டு சனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் கூறுகின்றனர்.
அத்துடன் 69% அமெரிக்கர் ரம்பும் போட்டியிடக்கூடாது என்று கூறுகின்றனர்.
இந்நிலையிலேயே No Labels கட்சி ஒரு பொது பிரதிநிதியை போட்டியிட வைக்க உள்ளது. இவர் வெற்றி கொள்ளாவிடினும், தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டிருப்பார்.
முன்னாள் Democratic கட்சி senator Joe Manchin உட்பட பலர் இந்த புதிய கட்சியில் உள்ளனர். கடந்த ஜூலை அளவில் சுமார் $70 மில்லியன் சேர்த்துள்ளது.