அமெரிக்காவில் ரம்ப் மீண்டும் சனாதிபதி ஆகிறார்

அமெரிக்காவில் ரம்ப் மீண்டும் சனாதிபதி ஆகிறார்

நேற்று செவ்வாய் அமெரிக்காவில் இடம்பெற்ற 2024ம் ஆண்டுக்கான சனாதிபதி தேர்தலில் முன்னாள் சனாதிபதி ரம்ப் வெற்றி பெறுகிறார். வாக்கு எண்ணல் முற்று பெறாவிட்டாலும் இவருக்கு போதிய electoral வாக்குகள் கிடைக்கவுள்ளன.

Michigan, Wisconsin, Arizona, Nevada ஆகிய swing மாநிலங்களின் முடிவுகள் தீர்மானம் இல்லை என்றாலும் இவற்றிலும் ரம்ப் முன்னணியில் உள்ளார்.

Georgia, Pennsylvania ஆகிய இரண்டு மாநிலங்களை இம்முறை ரம்ப் பறித்தால் ரம்ப் மேலும் 36 electoral வாக்குகளை பெறுகிறார். அதனால் அவரின் தொகை தற்போது 267 ஆகிறது. அலாஸ்காவில் இவருக்கு மேலும் 3 electoral வாக்குகள் கிடைக்கும். வெற்றி அடைய 270 electoral வாக்குகள் மட்டுமே தேவை.

இம்முறை ரம்ப் பறித்தெடுத்து Swing மாநில முடிவுகள்:

Georgia மாநிலத்தில் 2020ம் ஆண்டு Democratic கட்சியின் பைடென் 11,779 மேலதிக வாக்குகளை மட்டும் பெற்று (2,473,633 வாக்குகள், 49.47%) அந்த மாநிலத்தின் 16 electoral வாக்குகளை வென்றிருந்தார். இம்முறை ரம்ப் சுமார் 115,000 மேலதிக வாக்குகள் பெற்று (97% எண்ணப்பட்ட நிலையில்) இந்த மாநிலத்தை பறித்து இதன் 16 electoral வாக்குகளை பெற்றுள்ளார்.

Pennsylvania மாநிலத்தில் 2020ம் ஆண்டு Democratic கட்சியின் பைடென் 80,555 மேலதிக வாக்குகளை பெற்று (3,458,229 வாக்குகள், 50.01%) அந்த மாநிலத்தின் 20 electoral வாக்குகளை வென்றிருந்தார். இம்முறை ரம்ப் சுமார் 180,000 மேலதிக வாக்குகள் பெற்று (96% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில்) இந்த மாநிலத்தை பறித்து இதன் 20 electoral வாக்குகளை பெற்றுள்ளார்.

Michigan மாநிலத்தில் 78% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ரம்ப் 52.5% வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளார். இங்கு 15 electoral வாக்குகள் உண்டு.

Wisconsin மாநிலத்தில் 92% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ரம்ப் 51.2% வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளார். இங்கு 10 electoral வாக்குகள் உண்டு.

Nevada மாநிலத்தில் 81% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ரம்ப் 51.6% வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளார். இங்கு 6 electoral வாக்குகள் உண்டு.

Arizona மாநிலத்தில் 52% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ரம்ப் 50.6% வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளார். இங்கு 11 electoral வாக்குகள் உண்டு.

அமெரிக்காவில் இதுவரை சனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்ட கிளின்டன், ஹாரிஸ் ஆகிய இரண்டு பெண்களையும் சனாதிபதியாகாது தடுத்தவர் ஆகிறார் ரம்ப்.