அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இடப்படும் பெயர்களில் முகமத் முதல் 10 பெயர்களில் ஒன்றாக இம்முறை இடம்பெறுள்ளது. இப்பெயர் இம்முறை 10 ஆவது இடத்தில் உள்ளது. இவ்வாறு முகமத் முதல் 10 பெயர் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் தடவை.
.
பெரும்பாலான இஸ்லாமிய குடும்பங்கள் தமது முதல் மகனுக்கு முகமத் என்று பெயர் வைப்பதே இவ்வாறு அதிகம் குழந்தைகள் முகமத் என்ற பெயரை கொண்டிருக்க காரணம் என்று கூறப்படுகிறது. இப்பெயர் பல்வேறு ஆங்கில உச்சரிப்புகளை கொண்டது.
.
BabyCenter என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி முகமத் என்ற குழந்தை பெயர் 2013 ஆம் ஆண்டில் முதல் முறையாக முதல் 100 குழந்தை பெயர்கள் பட்டியலில் அமைந்திருந்தது.
.
அதேவேளை Social Security Administration தவுகளின்படி Muhammad என்ற உச்சரிப்பை கொண்ட குழந்தை பெயர் 2000 ஆம் ஆண்டில் 620 ஆவது இடத்தில் இருந்து பின் 2018 ஆம் ஆண்டில் 345 ஆம் இடத்துக்கு உயர்ந்துள்ளது. Mohammad போன்ற மற்றைய உச்சரிப்புகள் மேற்படி கணிப்பில் அடங்கா.
.
அமெரிக்காவில் ஆறு வருடங்களாக முதலாம் இடத்தில் இருந்த ஆண் குழந்தை பெயர் Jackson இம்முறை இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. Sophia பெண் குழந்தைகள் பட்டியலில் கடந்த 10 வருடங்களாக முதல் இடத்தில் உள்ளது.
.
அமெரிக்காவில் முதல் 10 ஆண் குழந்தை பெயர்கள்:
1) Liam, 2) Jackson, 3) Noah, 4) Aiden, 5) Grayson, 6) Caden, 7) Lucas, 8) Elijah, 9) Oliver, 10) Muhammad
.
முதல் 10 பெண் குழந்தை பெயர்கள்:
1) Sophia, 2) Olivia, 3) Emma, 4) Ava, 5) Aria, 6) Isabella, 7) Amelia, 8) Mia, 9) Riley, 10) Aaliyah
.