இன்று நவம்பர் 3 ஆம் திகதி இடம்பெற்ற அமெரிக்க சனாதிபதி தேர்தல் திடமான தீர்மானம் இன்றியதாக உள்ளது. வழமைபோல் ஐந்து swing states வாக்கு எண்ணல் வேலைகள் முடிவின்றி உள்ளன. இறுதி முடிவுகள் வெளியாக ஒருசில தினங்கள் தேவைப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சிலவேளைகளில் இந்த விசயங்கள் நீதிமன்றங்கள் சென்று இழுப்படவும்கூடும். 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற Al Gore, Bush (மகன்) போட்டியிட்ட சனாதிபதி தேர்தலும் நீண்ட காலம் நீதிமன்றில் இழுபட்டு இருந்தது.
தற்போது பைடென் 244 electoral வாக்குகளை பெற்றுள்ளார். ரம்ப் 213 electoral வாக்குகளை பெற்றுள்ளார். சனாதிபதியாக வென்றி பெற குறைந்தது 271 electoral வாக்குகள் தேவை. Pennsylvania (20 electoral வாக்குகள்), Georgia (16), Michigan (16), North Carolina (15), Wisconsin (10) ஆகிய ஐந்து swing states வாக்குகளே முற்றாக எண்ணப்படாமல் உள்ளன.
பைடென் இதுவரை Arizona (11 வாக்குகள்) மாநிலத்தை மட்டுமே 2016 ஆம் ஆண்டில் வென்ற ரம்பிடம் இருந்து பறித்துள்ளார். 1996 ஆம் ஆண்டுக்கு பின் இம்முறையே Arizona மாநிலம் Democratic கட்சிக்கு கிடைத்துள்ளது.
ரம்ப் கணிசமான ஆதரவை இழந்து இருந்தாலும் படுதோல்வி அடையாத நிலையில் உள்ளார். அமெரிக்காவின் பிளவு மேலும் வலுப்பெற்று வருகிறது புரிகிறது.
இந்த ஆண்டுக்கான அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கு $6.6 பில்லியன் ($6,600 மில்லியன்) செலவானதாக கூறப்படுகிறது. இதே காலத்தில் இடம்பெறும் அமெரிக்க காங்கிரஸ் தேர்தல் செலவுகளுடம், மொத்த தேர்தல் செலவு $14 பில்லியன் ஆக உள்ளது. 2016 ஆம் ஆண்டு சனாதிபதி மற்றும் காங்கிரஸ் தேர்தல்களுக்கு மொத்தம் $6.5 பில்லியன் மட்டுமே செலவாகி இருந்தது.
வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் செலவழிக்கும் தொகைக்கு கட்டுப்பாடு உண்டு. இந்த ஆண்டு சனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஆகக்கூடியது $104 மில்லியன் பணத்தை மட்டுமே செலவழிக்க முடியும். ஆனால் தனியார் மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட பொது அமைப்புக்கள் எல்லை இன்றி தமது வேட்பாளர் சார்பாக அல்லது எதிரி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரங்களில் செலவழிக்கலாம். தற்போது அமெரிக்காவில் பணம் இல்லையேல், சனநாயகம் இல்லை என்றாகியுள்ளது.
அமெரிக்க சனாதிபதி தேர்தல்:
அமெரிக்க சனாதிபதி தேர்தலில் வாக்குகளை தேசிய அளவில் கணித்து வெற்றியாளரை தெரிவு செய்வதில்லை. பதிலாக electoral college (electoral vote) என்ற முறையே பயன்படுத்தப்படும். அதனாலாயே தேசிய அளவில் 48.2% வாக்குகள் பெற்ற Clinton தோல்வி அடைய 46.1% வாக்குகள் பெற்ற ரம்ப் 2016 ஆம் ஆண்டு சனாதிபதியாகினார். 2016 ஆம் ஆண்டு ரம்புக்கு கிடைத்த electoral வாக்குகள் 304, Clinton பெற்றது 227.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையான electoral votes உண்டு. Alaska, Delaware, Montana, North Dakota, South Dakota, Vermont, Wyoming போன்ற சனத்தொகை குறைந்த மாநிலங்கள் 3 electoral வாக்குகளை கொண்டுள்ளன. இதுவே மிக குறைந்த electoral வாக்குகள் ஆகும். சனத்தொகை மிகையான மாநிலமான California மாநிலம் மொத்தம் 55 electoral வாக்குகளை கொண்டுள்ளது. அடுத்து Texas மாநிலம் 38 வாக்குகளை கொண்டுள்ளது. New York, Florida மாநிலங்கள் ஒவ்வொன்றும் 29 வாக்குகளை கொண்டுள்ளன.
பொதுவாக ஒரு மாநிலத்தில் வெல்லும் போட்டியாளர் அந்த மாநிலத்தின் அனைத்து electoral வாக்குகளையும் பெறுவார். உதாரணமாக கலிபோர்னியாவில் ஒருவர் 50.1% வாக்குகளை பெற்று, மற்றவர் 49.9% வாக்குகளை பெற்றாலும், 50.1% வாக்குகளை பெற்றவருக்கு அந்த மாநிலத்து 55 electoral வாக்குகளும் கிடைக்கும். Nebraska, Maine ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டும் வாக்குகளை பங்கிட்டு வழங்கும்.
தற்போது அமெரிக்கா முழுவதும் மொத்தம் 538 electoral வாக்குகள் உண்டு. அதில் குறைந்தது 270 வாக்குகளை பெறுபவர் சனாதிபதி ஆவார். வெல்பவர் ஜனவரி 20 ஆம் திகதி பதவியை ஏற்பார்.
பொதுவாக சில மாநிலங்கள் எப்போதுமே Democratic கட்சியை ஆதரிக்கும். வேறு சில எப்போதுமே Republican கட்சியை ஆதரிக்கும். அதனால் நடைமுறையில் மீதமுள்ள ஒருசில மாநிலங்களே வெற்றியாளரை தீர்மானிக்கும். பின்வரும் மாநிலங்களே மூன்றாம் வகைக்குள் அடங்கும். மூன்றாம் வகையை swing states அல்லது battleground states என்று அழைப்பர்.