அமெரிக்காவில் சீனாவின் அதிவேக ரயில்

ChinaRail

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள Los Angeles நகரத்தில் இருந்து நெவாட (Nevada) மாநிலத்தில் உள்ள Las Vegas  நகரம் வரை அதிவேக ரயில் பாதை ஒன்றை அமைக்கும் பணியை சீன நிறுவனங்கள் எடுத்துள்ளன. இது சீனாவால் அமரிக்காவில் மேற்கொள்ளப்படும் மிக பெரிய வர்த்தக வேலைப்பாடு ஆகும். சீனாவின் China Railway International நிறுவனமும் அமெரிக்காவின் XpressWest நிறுவனமும் இணைந்து இப்பாதையை அமைக்கவுள்ளன.
.
இந்த புதிய பாதை 370 km நீளம் கொண்டதாக இருக்கும். இதன் மொத்த முதலீடு சுமார் U$ 5 பில்லியன் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
.
சீன தலைவர் ஷி ஜின் பிங்கின் (Xi JinPing) அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தின் அங்கமாகவே இந்த அறிவிப்பு உள்ளது. ஷி ஜின் பிங் இந்த மாதம் 25 ஆம் திகதி அமெரிக்கா வருகிறார்.
.
ரயில் பாதை கட்டுமான வேளைகளில் சீனாவே தற்போது முன்னணி இடத்தில் உள்ளது. கடந்த 12 வடங்களில் சீனாவில் 17,000 km நீளமான அதிவேக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

.