அமெரிக்காவின் West Virginia மாநிலம் கரோனா தடுப்பு மருந்து பெறும் 16 முதல் 35 வயதுக்கு உட்பட்டோருக்கு $100 வழங்க முன்வந்துள்ளது. இந்த செய்தியை ஆளுநர் Jim Justice தெரிவித்து உள்ளார். மேற்படி வயதினரை தடுப்பு மருந்து பெற ஊக்குவிப்பதே நோக்கம். அந்த $100 சன்மானம் saving bond மூலமே வழங்கப்படும்.
பொதுவாக Republican கட்சி முன்னணியில் உள்ள மாநிலங்களில் கரோனா தடுப்பு மருந்துக்கு ஆதரவு இல்லை. ரம்ப் போன்ற அரசியல்வாதிகளின் பேச்சுகளும் காரணம். ஆனால் ரம்ப் ஜனவரி மாதமே தடுப்பு மருந்து பெற்றுள்ளார்.
அந்த மாநிலத்தில் தற்போது 35.3% மக்களே குறைந்தது ஒரு ஊசியையாவது பெற்று உள்ளனர். ஆனால் 75 வயதுக்கும் அதிகமா வயதுடையோர் 78% அளவில் தடுப்பு மருந்து பெற்றுள்ளனர்.
அந்த மாநிலத்தில் சுமார் 380,000 பேர் 16 முதல் 35 வயதுக்கு உட்பட்டோர். அவர்களில் சிலர் தாமாக முன்வந்து தடுப்பது மருந்தை பெற்று உள்ளனர். அவர்களும் $100 வழங்கப்படுமா என்பது அறிவிக்கவில்லை.
உலக நாடுகள் கரோனா தடுப்பு மருந்துக்கு காத்திருக்க, அமெரிக்கா போன்ற நாடுகள் பெருமளவு மருந்தை கைக்கொண்டு உள்ளன.